Monday , January 20 2020
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொறுப்பை ஏற்கின்றது அரசு
ஆணைக்குழு ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொறுப்பை ஏற்கின்றது அரசு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உயிர்த்த ஞாயி­றுத் தினத் தாக்­கு­தல்­க­ளுக்­கான பொறுப்பை ஏற்­றுக்­கொள்­கின்­றது. பார­தூ­ர­மான இந்த விட­யத்­தில் இருந்து ஓடி­விட முடி­யாது.

இவ்­வாறு தெரி­வித்­தார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

கடந்த ஏப்­ரல் மாதம் 21ஆம் திகதி நாட்­டில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­கள் தொடர்­பாக ஆரா­யும் நாடா­ளு­மன்­றத் தெரி­வுக் குழு­வில் நேற்­றுச் சாட்­சி­ய­ம­ளிக்­கும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது-

எனக்­குச் சட்­டம் ஒழுங்கு அமைச்­சின் மூல­மும், இரா­ணு­வத்­தின் மூல­மும் தேசிய பாது­காப்­புத் தொடர்­பான தக­வல்­கள் கிடைத்­தன. காத்­தான்­கு­டி­யில் அடிப்­ப­டை­வா­தம், தீவி­ர­வா­தம் இருந்­தன என்­பதை நான் அர­சி­யல்­வாதி என்ற ரீதி­யில் அறி­வேன்.

துருக்கி அமைப்பு ஒன்று இங்கு இருக்­கின்­றது என்று எனக்­குச் சொல்­லப்­பட்­டது. ஆனால் அவர்­க­ளால் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் உள்­ளது என்று சொல்­லப்­ப­ட­வில்லை.

தேசிய பாது­காப்­புச் சபை­யில் அரச தலை­வர், தலைமை அமைச்­சர், முப்­ப­டைத் தள­ப­தி­கள், பாது­காப்­புச் செய­லர், தேவைப்­ப­டின் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் ஆகி­யோர் இருப்­பர். கடந்த பெப்­ர­வரி மாதத்­தின் பின்­னர் பாது­காப்­புச் சபை கூட்­டப்­ப­ட­வில்லை. ஆர்ப்­பாட்­டம், போராட்­டங்­கள், அடிப்­ப­டை­வ­தாம், புலி­க­ளின் மீளெ­ழுச்சி என்­பன பற்­றிக் கூறப்­பட்­டி­ருந்­தா­லும், பயங்­க­ர­வா­தம் பற்றி என்­னி­டம் கூறப்­ப­ட­வில்லை.

தீவி­ர­வாத விசா­ர­ணைப் பிரிவு 2018ஆம் ஆண்டு ஸஹ்­ரா­னைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது. அவர் நாட்­டில் இருந்து வெளி­யே­றி­விட்­டார் என்று கரு­தியே அவ­ரைக் கைது செய்ய நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

சட்­டம், ஒழுங்கு அமைச்சை நான் இரு­வா­ரம் மட்­டும் வைத்­தி­ருந்­தேன். பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளைத் தடை செய்­வ­தற்­காக அவர்­கள் மீது வழக்­குப் பதிவு செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.
மத­ரசா பாட­சா­லை­கள் தொடர்­பாக ஒரு கட்­ட­மைப்பு இருக்­க­வில்லை. வெளி­யில் இருந்து வந்த நபர்­கள் தொடர்­பா­கத் தாக்­கு­த­லின் பின்­னரே அறிந்து கொண்­ட­டோம். அமைச்­ச­ர­வை­யில் நாங்­கள் இவை பற்­றி­யெல்­லாம் பேசி­யுள்­ளோம்.

இது ஒரு பார­தூ­ர­மான பாது­காப்­புக் குறை­பாடு. அரச புல­னாய்­வுத்­து­றைத் தலை­வர் ஏதும் இருந்­தால் என்­னி­டம் சொல்­வார். ஆனால் இந்த விட­யம் தொடர்­பாக நான் அறி­ய­வில்லை.

ஜே.ஆர். ஆட்­சி­யில் 83 ஆம் ஆண்­டின் பின்­னர் பாது­காப்­புச் சபை ஒரு வாரத்­துக்கு ஒரு தடவை கூடி­யது. கல­வர காலத்­தில், போர்க் காலத்­தில் இவ்­வாறு சபை கூடி­யது. அரச தலை­வர் இல்­லா­த­போது தலைமை அமைச்­சர் சபை­யில் சபை கூடி­யது. சந்­தி­ரிக்கா ஆட்­சிக்­கா­லத்­தில் அவர் இல்­லா­த­போ­தும் கூடி­யது.

தாக்­கு­த­லின் பின்­னர் பாது­காப்­புச் சபையை நான் கூட்­டி­னேன். நான் பாது­காப்பு அமைச்­சுக்கு நேரே சென்று சபை­யைக் கூட்­டி­னேன். பாது­காப்­புச் சபை­யின் சில கூட்­டங்­க­ளுக்கு நான் அழைக்­கப்­ப­ட­வில்லை. நான் அப்­போது ஒத்­து­ழைக்­காது விட்­டி­ருந்­தால் சபை­யைக் கூட்­டி­யி­ருக்க முடி­யாது. காலப்­போக்­கில் பாது­காப்­புச் சபை கூட்­டப்­ப­ட­வில்லை என்­பதை அறிந்­தேன்.

காத்­தான்­கு­டி­யில் வெடிப்­புச் சம்­ப­வம் ஒன்று நடந்து என்று அறிந்­தேன். அது­பற்றி விசா­ரித்­துப் பார்க்­கச் சொன்­னேன். ஆனால் அது­தொ­டர்­பான முழு விவ­ரங்­கள் கிடைக்­க­வில்லை. பாது­காப்­புத் துறை­யில் முறை­யான ஒருங்­கி­ணைப்பு இல்­லாத கார­ணத்­தால்­தான் இப்­ப­டி­யான தெரி­வுக் குழுவை அமைத்து ஆரா­யத் தீர்­மா­னித்­தோம்.
இந்­தத் தவ­றுக்கு நாம் பொறுப்­பேற்க முடி­யாது. அதி­லி­ருந்து அரசு தப்­பி­யோ­டி­விட முடி­யாது. இதைத்­தான் நான் ஆரம்­பத்­தி­லேயே கூறி­னேன்.

இப்­போ­துள்ள சட்­டங்­கள் போதாது என்­ப­தால் புதிய சட்­டங்­க­ளைக் கொண்­டு­வர நாங்­கள் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றோம். சட்­டம், ஒழுங்கு அமைச்­சுக்கு அனு­ப­வம் வாய்ந்­த­வர்­கள் நிய­மிக்­கப்­பட வேண்­டும். அனு­ப­வம் வாய்ந்­த­வர்­களை நிய­மிக்க வேண்­டும் என்று நாம் கேட்­டி­ருந்­தோம்.

அடிப்­ப­டை­வா­தம் மூலம்­மான் தீவி­ர­வா­தத்­துக்­குச் செல்­கின்­ற­னர். அதை எமது புல­னாய்­வுத் துறை­யி­னர் கண்­ட­றிய வேண்­டும். இந்த இரண்­டுக்­கும் இடையே உள்ள காலத்தை நாம் கணிக்க வேண்­டும், அதைக் கண்­ட­றிய வேண்­டும். அதைக் கண்­ட­றி­யா­தமை புல­னாய்­வுத்­து­றை­யின் பார­தூ­ர­மனா குறை­பாடு.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்­கம் புற்­று­நோய் போன்­றது. ஒன்று முடிந்­து­விட்­டது என்று நாங்­கள் அமை­தி­யாக இருந்­து­விட முடி­யாது. நாங்­கள் கவ­ன­மாக இருக்க வேண்­டும். நினைக்க முடி­யா­த­வற்­றைச் செய்­வார்­கள். ஆயு­தம் என்­பது துப்­பாக்கி மட்­டு­மல்ல. கத்தி போன்ற சிறு ஆயு­தங்­க­ளா­வும், வாக­னங்­க­ளால் மோதி­யும் கூட ஆபத்­துக்­களை ஏற்­ப­டுத்­த­லாம். நாம் கவ­ன­மாக இருக்க வேண்­டும். – என்­றார்.

Check Also

மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி அறிவிப்பு!

மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி அறிவிப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி அறிவிப்பு! நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் …

error: Content is protected!