Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரிக்கு இன்று ஆப்பு வைக்க காத்திருக்கும் ரணில் அணி

மைத்திரிக்கு இன்று ஆப்பு வைக்க காத்திருக்கும் ரணில் அணி

நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதம் இன்று இடம்பெறுகிறது. இன்றைய தினம் அரசியலரங்கில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

ஜனாதிபதியின் கீழ் உள்ள சுற்றாடல், பாதுகாப்பு அமைச்சுக்களிற்கான நிதி ஒதுக்கீட்டில் எந்த சிக்கலும் இருக்காதென தெரிகிறது. எனினும், ஜனாதிபதிக்கான விசேட ஒதுக்கீடுகளிற்கு ஐ.தேக.வின் எம்.பிக்கள் குழுவொன்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இன்றைய தினம் அவர்கள் வாக்கெடுப்பை கோருவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.தே.கவின் சுமார் 45 எம்.பிக்கள், ஜனாதிபதிக்கான விசேட ஒதுக்கீடுக்களை எதிர்க்க, ஆரம்பத்தில் கூட்டு சேர்ந்திருந்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இந்த விவகாரத்தில் பின்னணியில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டது.

விசேட ஒதுக்கீடுகள் மூலம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு மைத்திரி தயாராகிறார் என்பதே ஐ.தே.க பின்வரிசை உறுப்பினர்களின் குற்றச்சாட்டு.

ஐ.தே.கவின் நகர்வினால் கோபமடைந்த ஜனாதிபதி, “அந்த ஒதுக்கீட்டை ஐ.தே.க எதிர்த்தால், நான் யார் என்பதை காட்டுவேன்” என தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருந்தார்.

பிரமுகர்கள் கொலை சதி முயற்சியில் விளக்கமறியலில் உள்ள நாலக சில்வாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஐ.தே.கவின் பெரும் தலைவர்கள் சிலர் சிக்கலை சந்திப்பார்கள், ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சிக்கலையடுத்து, ஐ.தே.க தனது திட்டத்தை மாற்றிக் கொண்டது. ஜனாதிபதிக்கான விசேட ஒதுக்கீட்டை எதிர்ப்பதில்லையென ஐ.தே.க தீர்மானித்திருந்தது.

எனினும், திடீரென ஐ.தே.கவின் சிறிய குழுவொன்று வாக்கெடுப்பை கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் அந்த கோரிக்கையை சபையில் எழுப்புவார்களா?, அது அனுமதிக்கப்படுமா?, வாக்கெடுப்பில் ஐ.தே.க ஓரணியில் திரண்டு வாக்களிக்குமா?, மஹிந்த அணி ஆதரவளிக்குமா? போன்ற பரபரப்பான கேள்விகள் எழுந்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv