Monday , September 16 2019
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தமிழக பாஜக தலைவராக ரஜினிகாந்த்..? பரபரப்பு தகவல்..!
ரஜினிகாந்த்

தமிழக பாஜக தலைவராக ரஜினிகாந்த்..? பரபரப்பு தகவல்..!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் யாரும் எதிர்பாராத விதமாக தெலுங்கானா ஆளுநராக நேற்றையதினம் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக தமிழிசை வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவி தமிழகத்தில் காலியாக உள்ளது.

இந் நிலையில் பா.ஜ.கவின் தமிழக அடுத்த தலைவராக எச் ராஜா வா? அல்லது பொன் ராதா ? வருவார்கள் எனப்பேசப்படுகின்ற நிலையில் , அடுத்த தமிழக பாஜக தலைவராக நியமிக்க அதிக வாய்ப்பு கொண்டிருப்பது நடிகர் ரஜினிகாந்த் என்ற பேச்சும் அடிபடுகின்றது.

மேலும் இது குறித்த பேச்சுவார்த்தை ரஜினிகாந்துடன் பாஜக மேலிடம் மேற்கொண்டு வருவதாகவும் அதில் ஒருசில உடன்பாடு காரணமாக சற்று இழுபறியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பாஜக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டால் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க ரஜினிகாந்த் முன் வர உள்ளதாகவும் அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Check Also

Today rasi palan 16.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 15.09.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! Today rasi palan | இன்றைய ராசிபலன் 15.09.2019 மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் …

error: Content is protected!