Tuesday , April 16 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / பிரான்சில் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத சுற்றுச்சுவர் எழுப்ப பிரான்ஸ் அரசு திட்டம்

பிரான்சில் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத சுற்றுச்சுவர் எழுப்ப பிரான்ஸ் அரசு திட்டம்

பிரான்சில் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத சுற்றுச்சுவர் எழுப்ப பிரான்ஸ் அரசு திட்டம்

பிரான்சில் உள்ள பிரபல ஈஃபிள் கோபுரத்தை சுற்றிலும் கண்ணாடியால் ஆன தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது.

பிரான்சில் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடியால் ஆன சுற்றுச்சுவர் எழுப்ப பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.

சுமார் 2.5 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள இந்த கண்ணாடி சுவர் அமைக்க 300 மில்லியன் யூரோ செலவு கணக்கிடப்பட்டுள்ளது. 128 வருட பழைமையான ஈஃபிள் டவரை புதுப்பிக்கும் வகையில் இந்த கண்ணாடி சுவர் மாதிரியை அமைக்க உள்ளதாக ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதற்கான பணிகள் தற்போது தொடங்க உள்ளது.

ஈஃபிள் கோபுரத்தை கண்டுகளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் எந்தபகுதியில் இருந்து வேண்டுமானாலும் உள்ளே நுழைய முடியும். இந்த கண்ணாடியால் ஆன மதிலை எழுப்புவதன் மூலம் குறிப்பிட்ட வழியாக மட்டுமே சுற்றுலாப் பயணிகள் உள்ளே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுவர் எழுப்புவதன் மூலம் நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும். மேலும் ஈஃபிள் கோபுரம் பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …