Friday , April 19 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சை தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சை தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை இரத்துச் செய்யப்படுமாக இருந்தால் அதற்கு முன்னர் அது தொடர்பான மாற்று வேலைத்திட்டங்களை தயாரித்த பின்னரே அது நடக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மாற்று வேலைத் திட்டத்தை தயாரிக்காது அந்த பரீட்சை இரத்துச் செய்யப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் இந்த வருடத்திலிருந்தோ அல்லது அடுத்த வருடத்திலிருந்தோ அதனை செய்யப் போவதில்லை. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக தரம் 5 பரீட்சை தொடரும் என்று இன்றையதினம் தெரிவித்துள்ளார் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்.தேசிய கல்வி நிறுவகத்திடம் (NIE) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையைப் பற்றிய அறிக்கை ஒன்றை கோரியுள்ளேன்.

பரீட்சை சம்பந்தமான பரிந்துரைகளை உள்ளடக்கிய தனது அறிக்கையை NIE சமர்ப்பித்தபின், இந்த பரீட்சை தொடர்பாக எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார். இருப்பினும், முறையான கல்வியைக் கொண்டிருக்கும் திறனுடன் கூடிய மாணவர்களுக்கான பரிசோதனையை மேற்கொள்ளும் போது சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை முன்னுக்குப்பின்னாக ஜனாதிபதி,அறிவிப்புக்களை வெளியிடுவதால் மாணவர்களும் பெற்றோரும் பெருங்குழப்பத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv