Friday , March 29 2024
Home / அரசியல் / ஜெர்மனி பயணத்தை முடித்துகொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

ஜெர்மனி பயணத்தை முடித்துகொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னர் இந்தியாவுக்கு புறப்பட்டார்.

காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் பங்கிங்காம் அரண்மனையில் நேற்று தொடங்கியது. பிரிட்டன் ராணி எலிசபெத் மாநாட்டை தொடங்கி வைத்தார். காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் 91 வயதான எலிசபெத் பேசும் போது காமன்வெல்த் கூட்டமைப்பை தனக்கு பிறகு இளவரசர் சார்லஸ் தலைமை தாங்குவார் என தெரிவித்தார். சார்லஸ் தலைமைக்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என ராணி எலிசபெத் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்கு புறப்பட்டார். தனிவிமானம் மூலம் பெர்லின் வந்த பிரதமருக்கு அந்நாட்டு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அங்கு அந்நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மெர்கெலை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். மோடிக்கு, ஏஞ்சலா மெர்கெல் விருந்து அளித்தார். அதன்பின் இரு நாடுகளின் உறவு குறித்து மோடி – மெர்கெல் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv