Saturday , April 20 2024
Home / அரசியல் / சீன மாணவர்கள் இந்தியும் இந்திய மாணவர்கள் மாண்டரின் மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் – சுஷ்மா சுவராஜ்

சீன மாணவர்கள் இந்தியும் இந்திய மாணவர்கள் மாண்டரின் மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் – சுஷ்மா சுவராஜ்

‘ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு’ நாடுகளின் மாநாடு சீனாவின் குயிங்டோ நகரில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு பீஜிங்கில் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.

இந்தநிலையில்,பீஜிங்கில் நடைபெற்ற இந்திய சீனாவிற்கு இடையே ஹிந்தி பங்களிப்பு குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

சீனாவில் இந்தி திரைப்படங்கள் அதிகமாக பெருகி வருகின்றன. நேற்று வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேசினேன். அப்போது அவர் டாங்கல் என்ற பெண் குறித்து கூறினார். இந்தி நடிகர்கள் இங்கு பிரபலமாக உள்ளனர். ஒரு பெண் இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என்பது அவரது கனவு. அவரது கனவு விரைவில் நிறைவேறும் என்பது அவருக்கு தெரியாது. நிச்சியம் அவரது கனவு நிறைவேறும்.

நான் இந்திய தூதரிடம் 25 மாணவர்களை இந்தியாவிற்கு இந்தி கற்றுக்கொள்ள அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டேன். சீன-இந்திய உறவுகள் வலுப்பெறுகின்ற நிலையில், இந்திய மாணவர்கள் மாண்ட்ரி மொழியும், சீன மாணவர்கள் இந்தி மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம். சீன மாணவர்கள் இந்தியாவிற்கு செல்லும் போது மொழி ஒரு தடையாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv