Friday , April 19 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / நள்ளிரவில் கருணாநிதி சமாதியை நோக்கி படையெடுக்கும் மக்கள்!! என்ன நடந்தது…

நள்ளிரவில் கருணாநிதி சமாதியை நோக்கி படையெடுக்கும் மக்கள்!! என்ன நடந்தது…

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினாவில் அண்ணா சமாதி அருகே நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நள்ளிரவிலும் கலைஞரின் சமாதியை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியைச் சுற்றிலும் சூழ்ந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில், கலைஞர் சமாதியை காண நள்ளிரவு என்றும் பாராமல் அதிகளவில் தொண்டர்கள் வருகைத் தந்துள்ளார்கள்.

மேலும், எம்.ஜி.ஆர். சமாதியிலும், ஜெயலலிதா சமாதியிலும் மின்குமிழ்கள் எரிகின்றன, ஆனால், அண்ணா சமாதியில் சில மின்குமிழ் தவிர மற்ற மின்குமிழை மாநகராட்சி அணைத்துள்ளது.

இதனால் கலைஞர் சமாதியைச் சுற்றி இருட்டாக உள்ளது. இதனால் அண்ணா சமாதியில் இருந்து கலைஞர் சமாதிக்கு செல்ல பொதுமக்கள் இருட்டில் அவதியுற்றுள்ளனர்.

அரசின் இந்த செயற்பாட்டால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

மேலும், இதுவரையில் இல்லாத அளவு கலைஞரின் சமாதியை பார்வையிடுவதற்கு நள்ளிரவில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வருகைத்தந்திருந்தமை அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்படும்போது அவரை பார்வையிட முடியாதவர்கள், உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என பலரும் கலைஞரின் சமாதியை நோக்கி நள்ளிரவில் வருகைத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv