Wednesday , February 21 2018
Home / செய்திகள் / உலக செய்திகள் / மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை-(படம்)

மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை-(படம்)

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி புதன் கிழமை மாலை சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

-இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன் (வயது-20) என தெரிய வருகின்றது.

-குறித்த இளைஞன் சுவிட்சர்லாந்தின் (ECUBLENS VD) பகுதியில் கடந்த 3 வருடங்களாக வாழ்ந்து வரும் நிலையில் கடந்த புதன் கிழமை(9) மாலை இனம் தெரியாத நபர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

-இதன் போது குறித்த கொலையுடன் தொடர்பு பட்ட இலங்கையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிய வருகின்றது.

-குறித்த கொலை தொடர்பில் மேலதிக விசாரனைகளை சுவிட்சர்லாந்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர்-

Check Also

அப்துல் கலாம் வீட்டில் உணவருந்திய கமல்ஹாசன்

முன்னாள் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் நடிகர் கமல்ஹாசன் உணவு அருந்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. …

error: Content is protected!