Monday , June 18 2018
Home / செய்திகள் / உலக செய்திகள் / 104 பேருடன் நடுவானில் வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம்

104 பேருடன் நடுவானில் வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம்

கியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் José Marti சர்வதேச விமானநிலையத்திலிருந்து 104 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணிக்கு புறப்பட்டுள்ளது.

கியூபாவில் 104 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் José Marti சர்வதேச விமானநிலையத்திலிருந்து 104 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணிக்கு புறப்பட்டுள்ளது.

புறப்பட்ட சிறிது நேரத்திலே விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து காரணமாக உடனடியாக விரைந்துள்ள தீயணப்பு படையினர், விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வருகின்றனர்.

கீழே விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்ததால், அதையும் தீயணைப்பு வீரர்கள் அணைக்க போராடி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களை அங்கிருக்கும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

சம்பவத்தை அறிந்த கியூபா ஜனாதிபதி Miguel Diaz-Canel அங்கு விரைந்துள்ளதாகவும் விபத்தை நேரில் கண்ட அவர் பலியின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறியதாகவும், ஆனால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து தெரிவிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அங்கிருக்கும் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று, விபத்தில் சிக்கியவர்களில் மூன்று பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளதாகவும், பலர் மோசமான நிலையில் உயிருக்கு போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Check Also

இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 18.06.2018

மேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் …

error: Content is protected!