Monday , October 15 2018
Home / செய்திகள் / உலக செய்திகள் / இந்தியா மீது பொருளாதார தடை: மோடியின் கோரிக்கையை ஏற்பாரா டிரம்ப்?
President Donald Trump and Indian Prime Minister Narendra Modi

இந்தியா மீது பொருளாதார தடை: மோடியின் கோரிக்கையை ஏற்பாரா டிரம்ப்?

இந்திய அரசு அண்டை நாட்டு தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து போர் ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் செயல்பட்டுவந்தது. தற்போது ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா – ரஷ்யா கையெழுத்திட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே, ஈரான் விவகாரத்தில் இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்த அமெரிக்கா, ரஷ்யா விவகாரத்திலும் மிரட்டல் விடுத்தது. இந்த மிரட்டல்களை மீறியே இந்தியா ரஷ்யாவுடன் ஒப்பந்தம் வைத்துள்ளது.

இந்தனால், இந்தியா மீது பொருளாதார தடையை விதிப்பதை தவிர வேறு வழி இல்லை என அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் மட்டுமே இந்த தடையை நீக்கக்கூடிய அதிகாரம் படைத்தவராக இருப்பதால், அமெரிக்காவின் தடையை விலக்க அதிபர் டிரம்ப்பிடம் கோரிக்கை விடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

என்னதான் நட்பு நாடாக இந்தியா மற்றும் அமெரிக்கா பழகி வந்தாலும் இந்த கோரிக்கை டிரம்ப் ஏற்பாரா என்பது சந்தேகமே.

Check Also

இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 15.10.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …

error: Content is protected!