Tuesday , February 20 2018
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஆப்கானிஸ்தானில் ஓட்டல் மீது துப்பாக்கி ஏந்திய 4 பேர் தாக்குதல் : 5 பேர் பலி 8 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் ஓட்டல் மீது துப்பாக்கி ஏந்திய 4 பேர் தாக்குதல் : 5 பேர் பலி 8 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் ஓட்டல் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய 4 பேர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் காயம் அடைந்துள்ளன

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் நகரில் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த 4 பேர் நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தினர்.

தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் கட்டிடம் தீப்பிடித்து கொண்டது. அங்கு வசிப்போர் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் வேறு இடங்களுக்கு தப்பியோடினர்.

இத்தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் வரை காயமடைந்து உள்ளனர். பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட 100 பேர் விடுவிக்கப்பட்டடனர். இந்த சம்பவத்திற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த 2011ம் ஆண்டு தலீபான் தீவிரவாதிகள் இந்த ஓட்டல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Check Also

ஆபத்தில் சிக்கியுள்ள மைத்திரி! காப்பாற்றும் தீவிர முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுற்றி சதிவலைகள் பின்னப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆபத்தான கட்டத்திலிருக்கும் ஜனாதிபதியை பாதுகாக்க நடவடிக்கை …

error: Content is protected!