Monday , October 15 2018
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்
தமிழிசை

ஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்

பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் சின்மயி-வைரமுத்து விவகாரம் தொடர்பாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் அளித்த அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார் தமிழிசை சவுந்தர்ராஜன்.

கூட்டத்தில் தீர்ப்புக்கு எதிராக சத்யப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதுமுடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது சின்மயி வைரமுத்து விவகாரம் தொடர்பான கேள்விக்கு ‘ஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை அந்த ஆண்டாளே சின்மயி மூலமாக வந்து கிழித்து வருகிறார்.’ எனப் பதிலளித்தார்.

மேலும் இதுகுறித்து கூறுகையில் சின்மயின் புகார்கள் விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய்ந் நீதி வழங்க வேண்டுமெனக் கூறினார்.

Check Also

இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 15.10.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …

error: Content is protected!