Friday , November 24 2017
Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / நீட்டுக்காக போராட வேண்டிய அவசியமில்லை! கமல் கூறிய புதிய யோசனை

நீட்டுக்காக போராட வேண்டிய அவசியமில்லை! கமல் கூறிய புதிய யோசனை

தொடர்ந்து அரசியல், சமூக பிரச்சனைகள் பற்றி பேசிவரும் கமல்ஹாசன் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீட் தேர்வு பற்றி பேசினார்.

“இது பொழுதுபோக்கு நிகழ்ச்சி, இதில் ஏன் நீட் பற்றி பேசவேண்டும். எப்போதும் பொழுதுபோக்கிகொண்டிருக்க முடியாது.

நீட் தேர்வுக்காக நாம் போராட வேண்டிய அவசியமில்லை. நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையை நாம் எங்கோ தவறவிட்டுவிட்டோம். இது என் கருத்து, விமர்சனங்களை வரவேற்கிறேன்.

கல்வி கொள்கைகளை வகுக்கும் உரிமை மாநில அரசுகளிடம் தான் இருக்கவேண்டும். அப்படிதான் இருந்தது, ஆனால் எமெர்ஜென்சியின்போது மத்தியில் எடுத்து வைத்துக்கொண்டனர். அதை மாநில அரசு திரும்ப பெற வேண்டும்.

மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நீட் தேர்வை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள கூடாது என கேட்டால் நாம் அதற்காக எந்த விதத்திலும் தயாராகவில்லை என்பது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Check Also

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நாளை நடைபெறும் என அறிவிப்பு

சென்னையில் நேற்றிரவு விடிய விடிய கொட்டி தீர்த்த மழை காரணமாக இன்று நடைபெற வேண்டிய அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் உள்பட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!