Friday , September 21 2018
Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / கலைஞருக்காக நானே தெருவில் இறங்கி இருப்பேன்: நடிகர் ரஜினிகாந்த்

கலைஞருக்காக நானே தெருவில் இறங்கி இருப்பேன்: நடிகர் ரஜினிகாந்த்

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் முன்னரே திட்டமிட்டபடி நேற்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

ரஜினிகாந்த்-
“கலைஞர் இல்லாத தமிழ் நாட்டினை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அரசியலாகட்டும், தமிழ் சினிமா, கலை, இலக்கியம் என எதனை எடுத்தாலும் அதில் கலைஞரின் பங்களிப்பு இருக்கும். பன்முக திறமை கொண்ட கலைஞரின் இழப்பு எமக்கு பேரிழப்பாகும்.

மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுக்காமல் அரசு இருந்திருந்தால் நானே வீதியில் இறங்கி போராடியிருப்பேன். அத்துடன் டில்லியில் இருந்து மட்டுமில்லை பல மாநிலங்களில் இருந்தும் அரசியல் தலைவர்கள் இறுதி சடங்கிற்கு வந்திருந்த போது தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வந்திருக்க வேண்டும். அவர்கள் தவறு இழைத்து விட்டார்கள்” என கூறினார்.

விஷால்-
“இனி வரும் இளம் கலைஞர்களுக்கு கருணாநிதியின் பெருமைகளை எடுத்து சொல்ல புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நடிகர் சங்க கட்டிடத்தில் கலைஞர் பாவித்த பேனாவினை வைக்க வேண்டும்.” என கூறினார்.

நாசர்-
“கலைஞர் கருணாநிதியின் கதை, வசனத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான பராசக்தி படம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்று தமிழ் சினிமாவும் இல்லாமல் இருந்திருக்கும்” என கூறினார்.

Check Also

பிக்பாஸில் மாவு போட்டியில் நடந்த அடிதடி சண்டை

error: Content is protected!