Saturday , June 23 2018
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / மீண்டும் மெரினாவில் போராட்டம்! பொலிசார் குவிப்பு: ஏதற்காக தெரியுமா?
மெரினா
மெரினா

மீண்டும் மெரினாவில் போராட்டம்! பொலிசார் குவிப்பு: ஏதற்காக தெரியுமா?

சென்னை மெரினாவில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலை அடுத்து பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கடந்த 17 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள், இளைஞர்கள், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டத்தின் இறுதியில் கலவரம் வெடித்தது. இதனையடுத்து, மெரினாவில் போராட்டம் நடத்த 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே மீண்டும் போராட்டம் நடத்துவதற்காக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் கூட திட்டமிட்டிருப்பதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், சென்னை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான மெரினா பகுதியில் போராட்டக்காரர்கள் கூடாத வண்ணம் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Check Also

தாமிரபரணி ஆற்றில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி …

error: Content is protected!