Thursday , November 15 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தமிழர்களை சிதறடிக்கவே ஒன்று சேர்ந்த இரு மாபெரும் தலைவர்கள்

தமிழர்களை சிதறடிக்கவே ஒன்று சேர்ந்த இரு மாபெரும் தலைவர்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வடக்கு – கிழக்­கை இணைத்து, நாட்டை அர­ச­மைப்பு ஊடா­கப் பிளவு படுத்த எண்­ணிய புலம்­பெ­யர் தமி­ழர் அமைப்­புக்­க­ளின் நோக்­கங்­களை முறி­ய­டிக்­கவே இரு அர­சி­யல் தலை­வர்­க­ளும் ஒன்­றி­ணைந்­துள்­ள­னர் என்று தெரி­வித்­துள்­ளார் மேல் மாகாண முத­ல­மைச்­சர் இசுரு தேவப்­பி­ரிய.

அவ­ரது பணி­ய­கத்­தில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, நாட்டு மக்­க­ளின் நெடு­நாள் அர­சி­யல் கனவை மைத்­திரி நிறை­வேற்றி வைத்­துள்­ள­மை­யா­னது வர­வேற்­கத்­தக்­கது. கூட்டு அரசு என்று இரண்டு கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டா­லும் ஐக்­கிய தேசிய கட்­சி­யின் நோக்­கங்­கள் நமது நாட்டு பொருத்­த­மற்­ற­தா­க­வும் மேற்­கு­ல­கத்­தி­ன­ருக்கு பொருத்­த­மா­ன­தா­கு­வும் காணப்­பட்­டது.

கடந்த 3 ஆண்டு கால­மாக அரசு மேற்­கு­ல­கத்­தி­ன­ரது விருப்­பங்­களை மாத்­தி­ரமே நிறை­வேற்­றி­யது.

அர­சின் அதி­கா­ரங்­களை பொறுத்­த­வ­ரை­யில் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னரே அதி­கம்

செல்­வாக்­கு­டை­ய­வர்­க­ளாக காணப்­பட்­ட­னர். பெய­ர­ள­வில் மாத்­தி­ரமே சிறி­லங்கா சுதந்­திர கட்­சி­யி­னர் அர­சில் அங்­கம் வகித்­த­னர். கொள்கை ரீதி­யில் இரண்டு தரப்­பி­ன­ருக்­கும் பெரிய வேறுப்­பா­டு­கள் காணப்­பட்­டது. அதன் உச்­சக்­கட்­டமே கடந்த மாதம் 26ஆம் திகதி பெரிய மாற்­ற­மாக வெளிப்­பட்­டது.

நாடு தொடர்ந்து பொரு­ளா­தா­ரம் உள்­பட அனைத்து துறை­க­ளி­லும் பின்­ன­டைவை எதிர்­கொண்டு வந்­தது. ஐக்­கிய தேசிய கட்­சி­யி­ன­ரது செயற்­பா­டு­கள் இவற்றை வலுப்­ப­டுத்­து­வ­தாக இருந்­தது. பன்­னாட்டு ரீதி­யி­லும் நாட்­டின் தனித்­து­வம் மழுங்­க­டிக்­கப்­பட்;டது.

இவ்­வா­றான விட­யங்­க­ளுக்கு தீர்வு கண்டு நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்­தவே முன்­னாள் அர­ச­த­லை­வரை நாங்­கள் தலைமை அமைச்­ச­ரா­கத் தெரிவு செய்­தோம். பல தீர்க்­க­மான கலந்­து­ரை­யா­ட­லின் பின்­னரே இந்­தத் தீர்­மா­னம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

நாட்­டைப் பிள­வுப்­ப­டுத்­தும் விட­யங்­க­ளுக்கு கடந்த காலங்­க­ளில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க துணை சென்­றார். இதன் கார­ண­மாக பல தேசிய வளங்­கள் விற்­கப்­பட்­டது. புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளின் பிர­தான நோக்­கம் நாட்­டுக்­குள் மீண்­டும் இன­வி­ரோ­தங்­களை ஏற்­ப­டுத்­து­வது.

இவர்­க­ளின் நோக்­கங்­களை முறி­ய­டிக்­கவே இரு தலை­வர்­க­ளும் ஒன்­றி­னைந்­து­ள­ள­னர். இனி எமது நாட்டு மக்­க­ளுக்­கா­கவே அரசு செயற்­ப­டும். பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் அழுத்­தங்­கள் எவ்­வி­தத்­தி­லும் சமூக அர­சி­யல் விட­யங்­க­ளில் செல்­வாக்­குச் செலுத்­தாது – என்­றார்.

Check Also

கரையை நெருங்கும் கஜா புயல்…

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!இரவு 8 மணிமுதல் இரவு 11 மணிக்குள் கஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு …

error: Content is protected!