Thursday , January 18 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் வாழ்வை மேம்­ப­டுத்த இள­நீர் விற்­பனைத் திட்­டம்

மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் வாழ்வை மேம்­ப­டுத்த இள­நீர் விற்­பனைத் திட்­டம்

முல்­லைத்­தீ­வில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும் பொருட்டு இள­நீர் விற்­ப­னைத் திட்­டத்துக்காக மாகா­ண­சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் 5 லட்­சம் ரூபா நிதியை ஒதுக்­கீடு செய்­துள்­ளார்.

முல்­லைத்­தீ­வில் போரால் பாதிக்­கப்­பட்டு உடல் உறுப்­பு­களை இழந்த பலர் வறு­மை­யில் வாடு­கின்­ற­னர்.

அவர்­க­ளின் அன்­றாட பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கோடு இந்தத் திட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதற்­காக துரை­ராசா ரவி­க­ரன் தனது பிர­மாண அடிப்­ப­டை­யி­லான நிதி ஒதுக்­கீடு மூலம் குறித்த நிதி ஒதுக்­கீட்­டைச் செய்­தி­ருந்­தார். இந்த திட்­டத்துக்குள் இரு­பத்­தி­யொரு மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் உள்­ளீர்க்­கப்­பட்­டி­ருக் கின்­ற­னர்.

இது­ தொ­டர்­பாக நேற்று முல்­லைத்­தீவு சமூ­க­ சே­வைத் திணைக்­க­ளத்­தில் நடை­பெற்ற கூட்­டத்­தில் மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­டன், மாவட்ட சமூ­க­சேவை திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர் நட­ராசா தச­ர­தன் மற்றும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் பல­ரும் கலந்து­கொண்­டி­ருந்­த­னர்.

Check Also

இன்றைய ராசிபலன் 18.01.2018

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!