Friday , September 21 2018
Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்த அணிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
மஹிந்த அணியினர்

மஹிந்த அணிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள போவதாக கூறி வந்தவர்கள் தற்போது வெட்கமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அடிபிடிப்படும் நிலைமைக்கு சென்றுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக தற்போது ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்கின்றனர். அதேபோல், கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தும் வகையில் தேசிய வளங்கள் எதனையும் தற்போதைய அரசாங்கம் விற்பனை செய்யவில்லை. எமது தரப்பினர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வரை அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

மேலும் நாட்டின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர். ஆனால், இலங்கையின் வரலாற்றில் கடந்த ஆண்டே அதிகளவில் ஏற்றுமதி நடந்துள்ளது. இந்த ஆண்டு நாட்டின் ஏற்றுமதியை கடந்த ஆண்டை விட அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பிக்பாஸில் மாவு போட்டியில் நடந்த அடிதடி சண்டை

error: Content is protected!