Friday , September 21 2018
Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரியின் மிகப் பெரும் பெய்

மைத்திரியின் மிகப் பெரும் பெய்

மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையிலேயோ அல்லது வேறு வகையிலேயோ முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற வில்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் அரச தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவித்ததாவது,

தமது பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர் என்று தெரிவித்து – அதற்கு எதிராக முல்லைத்தீவில் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அதில் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்போல் அங்கு எதுவுமே நடக்கவில்லை. சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படவில்லை. இனி உருவாக்கப்படபோவதுமில்லை.

மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.

மகாவலி எல் வலயத்தில் 1980ஆம் ஆண்டுகளில் காமினி திசாநாயக்கவால் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது.

அவ்வாறு குடியேற்றப்பட்டவர்களின் குடும்பங்கள் விருத்தி அடைந்தமையால் அவர்களுக்கு வேறு காணிகள் வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் திட்டமிட்டவகையில் அங்கு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறவில்லை. தேசிய நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் நாம் குடியேற்றத்தை மேற்கொள்ளவில்லை.

அதேவேளை, இலங்கையில் யார் வேண்டுமானாலும் எந்தப் பகுதியிலும் வாழலாம். அதற்குரிய உரிமை அவர்களுக்கு இருக்கின்றது – என்றார்.

எரிபொருள் சூத்திரம்

எரிபொருள் விலைச் சூத்திரமானது தொடர்ச்சியாக எரிபொருள் விலையை மேல்நோக்கியே கொண்டு செல்கின்றது. பொதுமக்கள் பெரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். பேரூந்துப் பயணிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.

விலைச் சூத்திரத்தை முன்கொண்டு செல்வதா? அல்லது அதைக் கைவிடுவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கவேண்டியுள்ளது. நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது அது தொடர்பில் உறுதி முடிவு எடுக்கப்படும்.

மாகாணத் தேர்தல்

விருப்பு வாக்கு முறையை ஒழித்து புதிய தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துவதாக நாம் வாக்குறுதி அளித்திருந்தோம். தற்போது சில பிரச்சினைகள் சிக்கல்கள், காணப்படுகின்றபோதிலும் விரைவில் அவற்றுக்குத் தீர்வைக் கண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம்.

போர் வரலாறு

நாட்டில் இடம்பெற்ற போர் வரலாறு தொடர்பில் எழுதப்பட வேண்டியுள்ளது. போரின் போது ஏற்பட்ட வெற்றிகள், பின்னடைவுகள் என்பவற்றைக் குறிக்கும் வகையில் நடுநிலையான தரவுகளுடன் வரலாறு எழுதப்படவேண்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் படைத்தளபதிகளை அழைத்துப் பேசியிருக்கின்றேன். இந்த விடயம் குறித்து ஜயவர்த்தனபுர, கொழும்பு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

Check Also

பிக்பாஸில் மாவு போட்டியில் நடந்த அடிதடி சண்டை

error: Content is protected!