Thursday , November 15 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சிவசக்தி ஆனந்தனைப் போட்டுத் தாக்கிய!! TELO

சிவசக்தி ஆனந்தனைப் போட்டுத் தாக்கிய!! TELO

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ்த் தேசி­யத்­துக்­காக வவு­னியா மாவட்ட தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கத்­தி­னர் ஒற்­று­மை­யா­கப் பய­ணிக்­கின்­றார்­கள்.

இடை­யிலே குழப்­பி­விட்டு வெளி­யில் சென்­ற­வர்­கள் எங்­க­ளைப் பார்த்து கேள்வி கேட்­ப­தற்கு எந்­தத் தகு­தி­யும் இல்­லா­த­வர்­கள்.

தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கத்­தைப் பார்த்து நீங்­கள் (நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்­தி­ஆ­னந்­தன்) நடந்து கொள்­ளுங்­கள்.

நீங்­க­ளும் மீண்­டும் எங்­க­ளோடு இணைந்து தேசி­யத்­தைக் காக்­க­வேண்­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைச் சேர்ந்த வடக்கு மாகா­ண­ச­பை­யின் முன்­னாள் உறுப்­பி­னர் மயூ­ரன் தெரி­வித்­தார்.

வவு­னியா தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கத்­தின் 20ஆவது ஆண்டு பொதுக் கூட்­டம் நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னும் கலந்து கொண்­டி­ருந்­தார்.

நிகழ்­வில் உரை­யாற்­றிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன், இந்­தச் சங்­கம் வெளிப்­ப­டைத் தன்மை, சரி­யான நிதி அறிக்கை மற்­றும் பல்­வே­று­பட்ட கட்­டுப்­பா­டு­க­ளு­டன், சமூ­க­வே­லை­களை செய்து வரு­வ­தை­யிட்டு நாம் பெரு­மி­த­மும், மகிழ்­சி­யும் அடை­கின்­றோம். உங்­க­ளைப் பார்த்து நாம் பொறா­மைப்­ப­டு­வர்­க­ளாக இருக்­கி­றோம்.

நாமும் கிட்­டத்­தட்ட 15 ஆண்­டு­க­ளுக்கு மேலாக ஒரு இனத்­தின் விடு­த­லைக்­காக கூட்­ட­மைப்­பாக இருந்­தோம்.

ஆனால் 15ஆண்­டு­க­ளில் இது­போல ஒரு கணக்கு அறிக்­கை­யைக்­கூட எம்­மால் பார்க்க முடி­ய­வில்லை. இந்­தச் சங்­கத்­துக்கு ஒரு யாப்பு, வங்­கிக் கணக்கு இருக்­கின்­றது. அத­னை­விட ஐன­நா­யக ரீதி­யா­கத் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற நிர்­வா­கம் இருக்­கின்­றது.

ஒரு போக்­கு­வ­ரத்­துச் சங்­கத்­துக்கு இருக்­கக் கூடிய இந்த விட­யங்­கள் இனத்­தின் விடு­த­லைக்கு தலை­மை­தாங்­கு­கின்ற தலை­மை­க­ளி­டம் அல்­லது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­டம் இல்லை. ஒரு சர்­வா­தி­கா­ரப் போக்­கான நில­மையே அங்கு இருக்­கின்­றது. தமிழ்த் தலை­மை­க­ளுக்கு உங்­க­ளு­டைய சங்­கம் முன்­மா­தி­ரி­யாக இயங்­கு­வ­தை­யிட்டு மகிழ்­சி­ய­டை­கின்­றோம் -– என்­றார்.

மயூ­ரன்

இந்த நிகழ்­வில் உரை­யாற்­றிய முன்­னாள் மாகா­ண­சபை உறுப்­பி­னர் மயூ­ரன், உங்­க­ளு­டைய சங்­கத்­தைப் பார்த்து வியப்­ப­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆனந்­தன் கூறி­னார். அதனை நாம் வர­வேற்­கின்­றோம்.

20ஆண்­டு­க­ளாக இந்த தனி­யார் பேருந்துச் சங்­கம் உடை­யா­மல் தனித்­து­வ­மான முறை­யிலே பய­ணிக்­கின்­றது. நீங்­கள் உடைத்­து­விட்­டுச் சென்று விட்­டீர்­கள். அவர்­கள் உடைத்­து­வி­ட­வில்லை.

விக்­கி­யின் பல­வீ­னம்

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தற்­து­ணி­வோடு செய்த ஒரே­வி­ட­யம் வவு­னி­யா­வில் பேருந்து நிலை­யத்தை இட­மாற்­றி­யது மட்­டுமே. போக்­கு­வ­ரத்து அமைச்சு டெனீஸ்­வ­ர­னி­டம் இருந்து முத­ல­மைச்­ச­ரி­டம் செல்­கின்­றது.

இனி உங்­க­ளி­னு­டைய பாடு அதோ­க­தி­தான் என்று கடந்த பொதுக் கூட்­டத்­தில் நான் உங்­க­ளுக்­குக் கூறி­யி­ருந்­தேன். டெனீஸ்­வ­ரன் தனது நிர்­வா­கத்­தில் சிறப்­பா­கச் செயற்­பட்­டி­ருந்­தார்.

முத­ல­மைச்­சர் தனது ஆட்­சிக் காலத்­தில் பேச்­சோடு மாத்­தி­ரம் நில்­லா­மல், செய­லாற்­றிய விட­ய­மாக இந்­தப் பேருந்து நிலை­யத்தை மாற்­றி­யதை மாத்­தி­ரமே குறிப்­பிட முடி­யும். அவர் நன்­மை­க­ளைச் செய்­தி­ருந்­தா­லும் பல இடங்­க­ளிலே தவ­று­க­ளைச் செய்­தி­ருக்­கின்­றார். யாழ்ப்­பா­ணத்­தில் அவ­ருக்கு எவ்­வ­ளவு தூரம் செல்­வாக்கு இருக்­கி­றதோ அதே­அ­ளவு வீழ்ச்சி வவு­னியா மாவட்­டத்­தில் இருக்­கி­றது என்­றார்.

Check Also

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 15.11.2018

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesமேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று …

error: Content is protected!