Thursday , November 15 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரிக்கு கடிதம் எழுதிய சபாநாயகர்! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

மைத்திரிக்கு கடிதம் எழுதிய சபாநாயகர்! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பாராளுமன்ற அரசியல் கட்சிகள் சில மற்றும் சர்வதேச நாடுகள் சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி வரை ஒத்தி வைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டிருந்தநிலையில் சபாநாயகர் இவ்வாறு பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ஜனாதிபதி இலட்சியங்களில் இருந்து விலகிவிட்டார்! ரணில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த நல்லாட்சி அரசாங்கம் கொண்டிருந்த இலட்சியங்களில் …

error: Content is protected!