Sunday , January 21 2018
Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் இன்று முதல் மூடப்படும்.!

கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் இன்று முதல் மூடப்படும்.!

கொழும்பு – கட்­டு­நா­யக்க அதி­வேக வீதியில், களனி பாலம் அருகில், களனி மற்றும் வத்­தளை பகுதி நோக்கி வாக­னங்கள் வெளி­யே­று­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் வீதிகள் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது.

உத்­தேச புதிய களனி பால நிர்­மாணப் பணி­க­ளுக்­காக இந்த இரு வெளி­யேறும் பாதை­களும் இவ்­வாறு மூடப்­ப­டு­வ­தாக அந்த அதி­கார சபை குறிப்­பிட்­டது.

அதன்­படி இன்று முதல், கட்­டு­நா­யக்க அதி­வேக பாதை ஊடாக களனி, பேலி­ய­கொடை பகு­தி­க­ளுக்குள் வரு­வ­தற்கு பேலி­ய­கொடை வெளி­யேறும் பாதையை பயன்­ப­டுத்தி A1 கொழும்பு – கண்டி பிர­தான வீதிக்குள் நுழைய வேண்டும்.

அதேபோன்று அதி­வேக பாதையில் இருந்து வத்­தளை, பேலி­ய­கொடை பகு­தி­க­ளுக்கு வெளி­யேறி செல்­வ­தற்­கா­கவும் பேலி­ய­கொடை வெளி­யேறல் பாதையைப் பயன்­ப­டுத்தி கொழும்பு – நீர்­கொ­ழும்பு A3 வீதிக்குச் சென்று பய­ணிக்க வேண்டும்.

எனினும் கட்­டு­நா­யக்க அதி­வேக பாதையில் இருந்து கொழும்பு நோக்கி பய­ணிக்க வழமை போன்றே செல்ல முடியும் எனவும் இந்த அறி­வு­றுத்­தல்­களின் பிர­காரம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை சாரதிகள் பயணிக்குமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது

Check Also

ஆப்கான் ஓட்டல் தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பு ஏற்பு

காபூல் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு கூறிஉள்ளது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்கான்டினென்டல் ஓட்டலில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!