Monday , October 15 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி

கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி

முத்தமிழ் பேரறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 129ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது.

இதில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாணசபை இரங்கள் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலியினை செலுத்துமாறு அவைத் தலைவர் சீ.வி. கே.சிவஞானம் அறிவித்தார்.

இதனையடுத்து அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தியதுடன், முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கான அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.

இந்த உரை அமரர் மு.கருணாநிதியின் குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Check Also

வழக்கறிஞர்கள் கை விரித்து விட்டார்கள் – சின்மயி வேதனை

வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறும் பலர் சின்மயி இத்தனை வருடங்களாக ஏன் இதை …

error: Content is protected!