Thursday , November 15 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரணில் பிரபாகரனுக்கு சமன்: இப்படிக் கூறுகின்றது பொதுபலசேனா!

ரணில் பிரபாகரனுக்கு சமன்: இப்படிக் கூறுகின்றது பொதுபலசேனா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ரணில் விக்­கி­ர­ம­சிங்க விடு­த­லைப்­பு­லி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னைப் போன்­ற­வர். அவர் பிர­பா­க­ர­னுக்­குச் சம­மா­ன­வர்.

உள்­நாட்டு தரப்­புக்­கள் மற்­றும் ஊட­கங்­களை விட­வும் பிர­பா­க­ர­ னுக்கு ஆத­ர­வ­ளித்­தது போல் பன்­னாட்டு சமூ­கம், பன்­னாட்டு ஊட­கங்­கள் அவ­ருக்கு ஆத­ரவு வெளி­யி­டு­கின்­றன. இவ்­வாறு கூறி­யுள்­ளது பொது­ப­ல­சேனா அமைப்பு.

கொழும்­பில் பொது­ப­ல­சேனா நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்த சிங்­கள ராவய அமைப்­பின் பொதுச் செய­லர் மாகல்­கந்தே சுதந்த தேரர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

நாட்­டில் கூட்டு அரசை அமைத்த பின்­னர் 3 ஆண்­டு­கள் பொறுமை காத்த அரச தலை­வர் தற்­போது தலைமை அமைச்­சரை மாற்­றும் முடிவை எடுத்­துள்­ளார்.

நாங்­க­ளும் அரச தலை­வ­ரைப் பல­முறை அவ­தூ­றா­கப் பேசி­யுள்­ளோம். இப்­ப­டி­யான சிறந்த முடிவை மேற்­கொள்­ளும் ஆத்ம தைரி­யம் அவ­ரி­டம் உண்டு என்­பதை நாம் அறிந்­தி­ருக்­க­வில்லை.

கடந்த காலத்­தில் நாட்­டைச் சிறப்­பாக நிர்­வ­கித்த மகிந்த ராஜ­பக்­ச­வால்­தான் தற்­போ­துள்ள நிலை­யில் இருந்து நாட்டை மீளக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யும் என்று பொது­பல சேனா அமைப்பு நம்­பு­கின்­றது.

நாமல் குமார மூலமே மைத்­திரி கொலைச் சதி­மு­யற்சி வெளி­வந்­தது. அதன் பின்­னரே அவர் இத்­த­கை­ய­தொரு தீர்­மா­னத்­திற்கு வந்­தி­ருக்­கின்­றார். கொலைச்­ச­தி­யு­டன் சரத்­பொன்­சேகா தொடர்­பு­பட்­டுள்­ளார் என்று நாமல்­கு­மார குறிப்­பிட்­டுள்­ளார். அவர் உட­ன­டி­யா­கக் கைது செய்­யப்­பட வேண்­டும்.

இலங்கை பெற்­றோ­லி­யக் கூட்­டுத்­தா­ப­னத்­தில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச்­சூட்டு சம்­ப­வத்­தில் ஒரு­வர் கொல்­லப்­பட்­டுள்­ளார். துப்­பாக்­கிச்­சூட்­டினை நடத்­து­மாறு கூறிய அர்­ஜுன ரண­துங்க இன்­ன­மும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

நிறை­வேற்­ற­தி­கா­ர­மு­டைய அரச தலை­வர் முறைமை நீக்­கப்­ப­டக் கூடாது. அதன்­மூ­ல­மா­கவே இன்று அரச தலை­வ­ரால் சிறந்­த­தொரு தீர்­மா­னத்தை மேற்­கொள்ள முடிந்­துள்­ளது – என்­றார்.

Check Also

கட்சி ஆரம்பிக்காதீர்கள்: ரஜினிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் வேண்டுகோள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் பணியை தொடங்கி, அந்த பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும் சமீபத்தில் …

error: Content is protected!