Monday , July 16 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வீதிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும்- நல்லூர் பிரதேச சபையின் வரவேற்பு வளைவு!!

வீதிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும்- நல்லூர் பிரதேச சபையின் வரவேற்பு வளைவு!!

நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குட்­பட்ட பிர­தான வீதி­க­ளின் ஆரம்­பத்­தி­லும் முடி­வி­லும் சபை­யின் வாச­கம் அடங்­கிய வர­வேற்பு வளைவு அமைப்­பது எனத் தீர்­மா­னம் நிறைவேற்றப்பட்டது.

நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் அமர்வு சபை மண்­ட­பத்­தில் தவி­சா­ளர் தியாகமூர்த்தி தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் குறித்த பிரே­ர­ணையை தவி­சா­ளர் முன்­மொ­ழிந்­தார்.
பிரே­ர­ணை­யில் தெரி­வித்­தா­வது:

சபை­யின் எல்­லைக்­குட்­பட்ட பிர­தான வீதி­க­ளில் வர­வேற்பு வளை­வு­களை நிறுவத் தீர்­மா­னித்­துள்­ளோம். அதைப் பிரே­ர­ணை­யாக இந்தச் சபை­யில் முன்­மொ­ழி­கின்­றேன். இதை உறுப்­பி­னர்­கள் அங்­கீ­க­ரித்­தால் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யும்.

இவ்­வாறு வளை­வு­களை அமைப்­ப­தன் ஊடாக நாம் எமது சபை­யின் எல்­லைப்­ப­கு­தியை மக்­க­ளுக்கு தெளிவு படுத்­து­வ­து­டன். வீதி­யால் பய­ணிப்­ப­வர்­க­ளும் வாச­கங்­களை வாசிப்­ப­த­னால் மகிழ்­வர் – என்­றார்.

இந்­தப் பிரே­ர­ணைக்கு அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் ஆத­ர­வை வழங்க ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.

Check Also

இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 16.07.2018

மேஷம்: இன்று பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் …

error: Content is protected!