Monday , October 15 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சிங்களக் குடியேற்றங்கள் நடந்ததை ஏற்ற மைத்திரி
மைத்திரிபால சிறிசேன

சிங்களக் குடியேற்றங்கள் நடந்ததை ஏற்ற மைத்திரி

மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் ஊடாக முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் காணி­கள் வழங்­கி­யமை எனக்­குத் தெரி­யாது. உட­ன­டி­யாக அங்கு முன்­னெ­டுக்­கப்­ப­டும்

அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் நிறுத்­த­வும். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளார்.

வடக்கு – கிழக்கு மாகாண அரச தலை­வர் சிறப்­புச் செய­ல­ணி­யின் கூட்­டம் அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்று மாலை இடம்­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தி­லேயே மேற்­படி விட­யம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமிழ் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­கள், மகா­வலி எல் வல­யத்­தி­னால் அப­க­ரிக்­கப்­பட்டு பெரும்­பான்­மை­யின மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றது. இந்த விட­யத்தை கடந்த கூட்­டத்­தில் சுட்­டிக்­காட்­டி­ய­போது, அப்­படி எது­வும் நடக்­க­வில்லை என்று நீங்­கள் (அரச தலை­வர்) தெரி­வித்­தி­ருந்­தீர்­கள்.

ஆனால் நீங்­கள் பொறுப்­பாக இருக்­கின்ற மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் ஊடாக காணி அனு­ம­திப் பத்­தி­ரம் வழங்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், அதற்­கான ஆதா­ரத்­தை­யும் காண்­பித்­தார்.

இதன்­போது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கூறு­வது சரி என்­றும், தனக்­குத் தெரி­யா­மல் இது வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ளார். இந்­தச் செயற்­பாடு உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்­டும் என்­றும், எந்­த­வொரு கார­ணத்­துக்­கா­க­வும் அனு­ம­திப் பத்­தி­ரம் வழங்­கப்­ப­டக் கூடாது என்­றும் அரச தலை­வர் உட­ன­டி­யா­கவே பணிப்­புரை விடுத்­துள்­ளார்.

மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் பணிப்­பா­ளர், நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ள­மை­யி­னா­லேயே காணி உரி­மப் பத்­தி­ரம் வழங்­க­வேண்­டிய தேவை ஏற்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார். அந்த வழக்கு மீளப் பெறப்­பட வேண்­டும் என்­பதை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் குறிப்­பிட்­டுள்­ளார்.

மகா­வலி எல் வல­யம் தொடர்­பில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் பேச்சு நடத்தி முடிவு எடுக்­கும் வரை­யில் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­க­வேண்­டாம் என்று அர­ச­த­லை­வர் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளார்.

Check Also

இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 15.10.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …

error: Content is protected!