Sunday , April 22 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழ்ப்­பா­ணத்தை மீட்­டது நான் தான்!
சந்திரிகா

யாழ்ப்­பா­ணத்தை மீட்­டது நான் தான்!

கிளி­நொச்­சி­யை­யும், முல்­லைத்­தீ­வை­யுமே மகிந்த ராஜ­பக்ச அரசு விடு­த­லைப் புலி­க­ளி­ட­மி­ருந்து மீட்­டது. யாழ்ப்­பா­ணத்தை மீட்­டது நான்­தான். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க தெரி­வித்­தார்.

ஈவெ­யாங்­கொட பிர­தே­சத்­தில் நேற்­று­முன்­தி­னம் மாலை நடை­பெற்ற மக்­கள் சந்­திப்­பில் இத­னைக் கூறி­யுள்­ளார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

போரை வென்­ற­தா­கக் கூறு­கின்­றார்­கள். போரின் மூன்­றில் இரண்டு பங்கை யார் முடித்­தது. யார் யாழ்ப்­பா­ணத்தை புலி­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றி­யது?

எனது அரசு ஆட்­சியை பொறுப்­பேற்ற ஓராண்டு காலத்­தில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து புலி­கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்டு யாழ்ப்­பா­ணத்தை மீட்­டோம். வடக்­கில் புலி­கள் வச­மி­ருந்த மூன்­றில் இரண்டு பகு­தியை நாம் கைப்­பற்­றிக்­கொண்­டோம்.

கிளி­நொச்சி மற்­றும் முல்­லைத்­தீவு மட்­டுமே எஞ்­சி­யி­ருந்­தது. அவை இரண்­டை­யுமே ராஜ­பக்ச அரசு கைப்­பற்­றி­யது. நான் செய்த பிழை என்­ன­வென்­றால் வான­ளவு உய­ரத்­திற்கு பல கோடி ரூபா செல­விட்டு போர் வெற்றி தொடர்­பில் கட்­அ­வுட்­களை அமைத்­துக் கொண்டு பரப்­புரை செய்­ய­வில்லை. அத­னையே சிங்­கள பௌத்­தர்­க­ளின் பண்பு என்று நான் கரு­து­கின்­றேன் – என்­றார்.

Check Also

உடுவில் மகளிரை வென்றது வேம்படி!!

கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில், நேற்று இடம்பெற்ற ஆட்டமொன்றில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றிபெற்றது. …

error: Content is protected!