Tuesday , October 23 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கடை­சி­யில் பழி தமி­ழர்­கள் மீதா?

கடை­சி­யில் பழி தமி­ழர்­கள் மீதா?

இலங்­கை­யின் இனப் பிரச்­சினை தொடர்­பாக மங்­கள முன­சிங்க தலை­மை­யி­லான நாடா­ளு­மன்­றத் தெரி­வுக் குழு முன்­வைத்த யோச­னை­க­ளுக்கு அன்று தமிழ்க் கட்­சி­கள் இணங்­கி­யி­ருந்­தால் நாடு புதி­ய­தொரு வர­லாற்­றில் பய­ணித்­தி­ருக்­கும் என்று கூறி­யி­ருக்­கி­றார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

இட­து­சா­ரிக் கட்சி ஊடா­கத் தனது அர­சி­யல் பய­ணத்­தைத் தொடக்கி, சிறீ லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த தலை­வ­ராக வளர்ந்­த­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும் இரா­ஜ­தந்­தி­ரி­யா­க­வும் இருந்­த­வ­ரு­மான மங்­கள முன­சிங்க தொடர்­பாக நாடா­ளு­மன்­றத்­தில் நடந்த அனு­தா­பத் தீர்­மா­னம் குறித்து உரை­யாற்­றும்­போதே ரணில் இதைக் கூறி­யி­ருந்­தார். இத­ன­டிப்­ப­டை­யில் அர­சி­யல் தீர்வு ஒன்று ஏற்­ப­டா­த­தற்­கான பழி­யைத் தமி­ழர்­கள் மீது இல­கு­வா­கச் சுமத்­தி­விட்­டார்.

ஐக்­கிய தேசி­யக் கட்சி அதி­கா­ரத்­தில் இருந்­த­போது, ரண­சிங்க பிரே­ம­தாச அரச தலை­வ­ரா­கப் பதவி வகித்­த­போது எதிர்க் கட்­சி­யில் இருந்­த­வ­ரான மங்­கள முன­சிங்­க­வின் தலை­மை­யில் நாடா­ளு­மன்­றத் தெரி­வுக் குழு ஒன்றை அமைத்­தார்.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரத்­தைப் பகிர்­வ­து­டன் தொடர்­பு­பட்ட தேசி­யப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு ஒன்றை எட்­டு­வது இந்­தக் குழு­வுக்­குக் கொடுக்­கப்­பட்ட பணி. எனி­னும் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னையை ஒரு தேசி­யப் பிரச்­சினை என்று கரு­தாத மங்­கள முன­சிங்க, தனது குழு­வுக்கு இடப்­பட்ட கட்­ட­ளை­யில் இருந்து ‘தேசிய’ என்ற வார்த்­தையை நாடா­ளு­மன்­றத்­தின் அனு­ம­தி­யோடு பின்­னர் தூக்­கி­விட்­டார்.

இந்­தத் தெரி­வுக் குழு­வின் சார்­பில் ஓர் இடைக்­கால அறிக்­கை­யும் வெளி­யி­டப்­பட்­டது. எனி­னும் அது தமி­ழர்­க­ளின் அடிப்­ப­டை­கள், கோரிக்­கை­கள், விருப்­பு­கள், வேண­வாக்­கள் எவற்­றை­யும் கணக்­கில் எடுக்­க­வில்லை. குறிப்­பா­கப் பண்டா–- செல்வா ஒப்­பந்­தம், டட்லி–செல்வா ஒப்­பந்­தம் என்­ப­வற்­றின் ஆதார சுரு­தி­யைக்­கூ­டக் கொண்­டி­ருக்­க­வில்லை என்­று­கூ­றித் தமிழ்த் தலை­மை­க­ளால் நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்­வாக மங்­கள முன­சிங்க தலை­மை­யி­லான தெரி­வுக்­குழு முன்­வைத்த யோச­னை­கள் சிங்­கள, பௌத்த ஆட்­சி­யை­யும் அதி­கா­ரத்­தை­யும் இந்த நாட்­டில் அழுந்­தப் பதிப்­ப­தற்­கா­ன­தாக இருந்­ததே தவிர தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தற்­கா­ன­தாக இல்லை என்­கிற விமர்­ச­னம் அப்­போதே ஏற்­பட்­டது.

மற்­றொ­ரு­பு­றத்­தில் அப்­போது தமிழ் மக்­க­ளின் ஆயுத பல­மாக இருந்த தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­க­மும் இந்த இடைக்­கால அறிக்­கை­யைக் கண்­டு­கொள்­ளா­ம­லேயே தட்­டி­விட்­டது.

வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­க­ளைப் பகிர்­வது தொடர்­பாக ஆராய்ந்து அறிக்­கை­யி­டு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட இந்­தத் தெரி­வுக் குழு அதி­கா­ரப் பகிர்­வை­யன்றி அதி­கா­ரப் பர­வ­லாக்­கத்­தை­யொட்­டி­ய­தான தீர்வு யோச­னை­க­ளையே முன்­வைத்­தது. இதற்­கூ­டா­கக் கொழும்­பின் பிடியை மாகா­ணங்­க­ளி­னுள் இன்­னும் இறுக்­க­மா­கக் கொண்­டி­ருப்­ப­தற்­கான வாய்ப்பே உரு­வாக்­கப்­பட இருந்­தது.

இத­னா­லேயே அந்­தத் திட்­டத்­தைத் தமிழ் அர­சி­யல் தலை­மை­கள் நிரா­க­ரிக்க வேண்­டி­ய­தாக இருந்­தது. தொன்று தொட்டுத் தமி­ழர்­க­ளின் கோரிக்கை ஒன்­றா­கவே இருந்து வரு­கின்­றது. தமி­ழர்­கள் தமது தலை­வி­தி­யைத் தாமே தீர்­மா­னித்­துக்­கொள்­வ­தற்கு அவர்­க­ளுக்கு இருந்த அதி­கா­ரம் அவர்­க­ளி­டம் மீள­ளிக்­கப்­ப­ட­வேண்­டும் என்­பதே அந்­தக் கோரிக்கை.

ஐரோப்­பி­யர்­க­ளின் வரு­கை­யோடு இல்­லா­ம­லாக்­கப்­பட்ட அந்த அதி­கா­ரத்­தைக் கூட்­டாட்­சி­யின் ஊடா­கவோ, தனி­நாட்­டின் ஊடா­கவோ பெற்­றுக்­கொள்­வது மட்­டுமே தமி­ழர்­க­ளின் நோக்­க­மாக இருந்து வந்­தி­ருக்­கி­றது. அதற்­கா­கவே அற வழி­யி­லும் ஆயு­தப் போராட்­டத்­தின் ஊடா­க­வும் தொடர்ந்து போரா­டி­யி­ருக்­கி­றார்­கள், போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

அது புரிந்­தி­ருந்­தும் அதை வழங்­காது, தமது சொந்த அர­சி­யல் நலன்­க­ளுக்­கா­கச் சிங்­கள, பௌத்த மேலா­திக்­க­வா­தத்­தைத் தூக்­கிப்­பி­டித்து நிற்­கும் சிங்­கள ஆளும் வர்க்­கமே தீர்­வுக்­குத் தடை­யாக இருக்­கின்­றது. இந்த உண்­மையை இல­கு­வாக மறைத்­து­விட்­டுத் தமி­ழர்­கள் மீது பழி­யைப் போட்­டி­ருக்­கி­றார் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

தமி­ழர்­கள் தாம் விரும்­பு­வ­தைப் பெறு­வ­தற்­குப் போரா­டு­வ­தை­விட சிங்­க­ள­வர்­கள் தரு­வ­தைப் பெற்­றுக்­கொண்டு தீர்­வுக்கு வந்­து­வி­ட­வேண்­டும் என்­கிற கருத்தே அவ­ரது கூற்­றில் தொனிக்­கி­றது. வர­வி­ருக்­கும் புதிய அர­ச­மைப்பு விவ­கா­ரத்­தி­லும் அவர் அதையே எதிர்­பார்க்­கி­றார் என்­ப­தற்­கான கட்­டி­ய­மா­க­வும் இதை எடுத்­துக்­கொள்­ள­லாம்.

Check Also

அரசியல் வருகை குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை

கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, “நான் அரசியலுக்குவந்தால் அதை வைத்துப் பதவி வாங்க வேண்டும், …

error: Content is protected!