Wednesday , February 21 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மண்­டை­தீ­வுக் கட­லில் மிதந்த பெட்­டி­யில் வெடி­பொ­ருள்­கள்!!

மண்­டை­தீ­வுக் கட­லில் மிதந்த பெட்­டி­யில் வெடி­பொ­ருள்­கள்!!

யாழ்ப்­பா­ணம், மண்­டை­தீ­வுக் கட­லில் மிதந்து வந்த மரப்­பெட்டி ஒன்­றி­லி­ருந்து வெடி­பொ­ருள்­கள் மீட்­கப்­பட்­டன என்று ஊர்­கா­வற்­று­றைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அதில் 4 கண்­ணி­வெ­டி­கள், 2 மோட்­டார் குண்­டு­கள், 2 சார்ச்­சர் என்­பன மீட்­கப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

“கட­லில் நேற்று மாலை 5 மணி­ய­வில் பச்சை நிற மரப் பெட்டி ஒன்று மிதப்­பதை மீன­வர்­கள் சிலர் அவ­தா­னித்­துள்­ள­னர். அது தொடர்­பில் மண்­டை­தீவு பொலிஸ் காவ­ல­ர­ணுக்­குத் தக­வல் வழங்­கப்­பட்­டது.

பொலி­ஸார் மரப் பெட்­டியை மீட்­ட­னர். பெட்டி சோத­னை­யி­டப்­பட்­டது. அத­னுள் வெடி­பொ­ருள்­கள் காணப்­பட்­டன.

மேல­திக விசா­ர­ணை­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. நீதி­மன்ற அனு­ம­தி­யு­டன் வெடி­பொ­ருள்­கள் செய­லி­ழக்­கச் செய்­யப்­ப­டும்.”- என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Check Also

ஆபத்தில் சிக்கியுள்ள மைத்திரி! காப்பாற்றும் தீவிர முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுற்றி சதிவலைகள் பின்னப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆபத்தான கட்டத்திலிருக்கும் ஜனாதிபதியை பாதுகாக்க நடவடிக்கை …

error: Content is protected!