Saturday , December 16 2017
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு கட்­டாய இரா­ணு­வப் பயிற்சி

முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு கட்­டாய இரா­ணு­வப் பயிற்சி

சிவில் பாது­காப்பு பிரி­வி­ ன­ரால் வன்­னிப் பிர­தே­ சத்­தில் இயக்­கப்­ப­டும் முன் பள்­ளி­க­ளில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர்­கள் கட்­டாய இரா­ணு­வப் பயிற்­சி­யைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு நிர்­பந்­திக்­கப்­ப­டு­ கின்­ற­னர்.

அவர்­கள் தமது பணி­யி­லி­ருந்து இதன் கார­ண­மாக வில­கு­கின்­ற­னர். இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் இ.ஆர்­னோல்ட் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில், முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளின் கொடுப்­ப­னவை அதி­க­ரிப்­பது தொடர்­பான பிரே­ரணை முன்­வைக்­கப்­பட் டது. பிரே­ரணை மீதான விவா­தம் நடை­பெற்­றது.

விவா­தத்­தில் உரை­யாற்­றிய மாகா­ண­சபை உறுப்­பி­னர் இ.ஆர்­னோல்ட், வடக்கு மாகா­ணத்­தில் போருக்­குப் பின்­னர் இரா­ணு­வத்­தி­னர் சில இடங்­க­ளில் முன்­பள்­ளி­ களை நடத்தி வரு­கின்­ற­னர்.

அந்த முன்­பள்­ளி­க­ளில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு மாதாந்­தம் சம்­ப­ள­மாக 34 ஆயி­ரம் ரூபா வழங்­கப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளுக்கு கடன் அடிப்­ப­டை­யில் உந்­து­ருளி (மோட்­டார் சைக்­கிள்­க­ளும்) வழங்­கப்­பட்­டுள்­ளது.

இங்கு எமது பிள்­ளை­கள் இரா­ணு­வச் சீரு­டை­க­ளுக்கு முன்­னால் கல்வி கற்­ப­தால் அவர்­கள் மன­தில் பல தாக்­கங்­கள் ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்­புக்­கள் உள்­ளன. இது மட்­டு­மன்றி இரா­ணு­வத்­தி­ன­ரின் முன்­பள்­ளி­யில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர்­களை கட்­டாய இரா­ணு­வப் பயிற்­சிக்­கும் அழைத்­துள்­ளார்­கள்.

Check Also

பொது­ஜன பெரமுன நீதி­மன்றம் செல்கிறது

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­காக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஆறு சபை­க­ளுக்கு தாக்­கல்­ செய்த வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டமை தொடர்பில் அக்­கட்சி அடுத்­த­வாரம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!