Thursday , November 15 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கூட்­ட­மைப்­பின் மற்­றொரு எம்.பியும் கட்சி தாவ ஆயத்தம்!! அதிர்ச்சியில் சம்பந்தன்
இரா. சம்பந்தன்

கூட்­ட­மைப்­பின் மற்­றொரு எம்.பியும் கட்சி தாவ ஆயத்தம்!! அதிர்ச்சியில் சம்பந்தன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மற்­றொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் கட்சி தாவு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பி­லி­ருந்து கட்சி தாவிப் பிரதி அமைச்­சுப் பொறுப்பை ஏற்­றுக் கொண்ட வியா­ழேந்­தி­ர­னுக்கு நெருக்­க­மான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரே, விரை­வில் கட்சி தாவக் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கன­டா­வுக்­குச் சென்­றி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வியா­ழேந்­தி­ரன், நாடு திரும்­பும் போது, கட்சி தாவக் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் அலை­பே­சி­யில் கதைத்­துள்­ளார். கட்சி தாவும் தனது நிலைப்­பாட்டை அந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரி­டம் கூறி­ய­போது, அது புத்­தி­சா­லித்­த­ன­மான முடிவு என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

வியா­ழேந்­தி­ரன் கட்சி தாவிய பின்­ன­ரும், அவ­ரது முடிவு புத்­தி­சா­லித்­த­ன­மா­னது என்று அந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர் ஒரு­வ­ரி­ட­மும் நேர­டி­யா­கத் தெரி­வித்­துள்­ளார். இத­னால் அந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கட்சி தாவ­லாம் என்று கூறப்­ப­டு­கின்­றது.

இதனால் கூட்டமைப்பின் தலைவர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது…

Check Also

கரையை நெருங்கும் கஜா புயல்…

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!இரவு 8 மணிமுதல் இரவு 11 மணிக்குள் கஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு …

error: Content is protected!