Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மன்னார் வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கற்றாலை அகழ்வு

மன்னார் வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கற்றாலை அகழ்வு

மன்னார் நானாட்டன் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில்; உள்ள காட்டு பகுதியில் இன்று காலை வணஜுவராசிகளுக்கு சொந்தம் என குறிப்பிடப்பட்ட வங்காலை சரணாலயத்தில் உரிய அனுமதி இன்றி கற்றாலை சொடிகளை அகழ்வு செய்த மூவர் வங்காலை பிரதேச மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அப்பகுதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தாரபுரத்தை சேர்ந்த மூவரே குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர் கற்றாலை பிட்டி காட்டு பகுதியில் இன்று காலை சந்தோகத்திற்கு இடமாக ஆட்கள் நடமாட்டத்தை அவதானித்த மக்கள் காட்டு பகுதியினுள் சென்று பார்வையிட்ட போது மோற்படி கற்றாலை சொடிகள் நாற்பதுக்கு மோற்பட்ட பைகளில் நிறப்பப்பட்டு கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் காணப்பட்டதையடுத்து வங்காலை பிரதேசத்தை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு குறித்த மூவரையும் தடுத்து நிறுத்தி பொலிஸாருக்கு தகவலை வழங்கியதையடுத்து குறித்த பகுதிக்கு வருதை தந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குறித்த கற்றாலைகளையும் சந்தோகத்துக்கு இடமான மூவரையும் வங்காலை பொலிஸ் நிலையத்துக்கு மோலதிக விசாரனணகளுக்காக அழைத்து சென்றுள்ளனர்

மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக தாராபுரம் எருக்கலம் பிட்டி வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் அதிகளவிலான கற்றாலை சொடிகள் காணப்படுவதனால் அதனை அகழ்வு செய்து கொடுக்கும் பட்சத்தில் தங்களுத்கு நாள் கூழி வழங்கப்படுவதாகவும் குறித்த கற்றாலைகள் குருநாகல் மாவட்டத்திற்கு பயிர்செய்கைக்காக அனுப்பிவைக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட கற்றாலை அகழ்வோடு சம்மந்தப்பட்ட மூவரும் தெரிவித்தனர்.

ஆனாலும் இவ்வாரான நடவடிக்கைகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஒரு சில அரசியல்வாதிகளின் திட்டம் என கூறி கற்றாலை சொடிகளை வியாபார நோக்கத்திற்காக வேறு மாவட்டங்களுக்கு எடுத்து செல்கின்றனர் ஆனால் இந்த கற்றாலை எமது பிரதேச மக்களின் மருத்துவ தேவைக்காக அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும் எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இவ்வாரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv