செவ்வாய்க்கிழமை , செப்டம்பர் 19 2017
முக்கியச் செய்தி
முகப்பு / செய்திகள் / இலங்கை / நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பொன்சேகாவை அமைச்சுப் பதவியிலிருந்து தூக்குவோம்! – மஹிந்த அணி திட்டவட்டம் 
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பொன்சேகாவை அமைச்சுப் பதவியிலிருந்து தூக்குவோம்! – மஹிந்த அணி திட்டவட்டம் 

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தயாராகி வருகின்றது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா தமிழ் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரேரணை மூலம் சரத் பொன்சேகாவை அமைச்சுப் பதவியிலிருந்து தூக்குவோம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதியும் பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராகவும் செயற்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸில் நீதிமன்றில் போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இலங்கை அரசு கடும் சீற்றத்தில் இருக்கும் நிலையில், இறுதிக்கட்டப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, “ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றமிழைத்துள்ளார். அதற்குரிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன” என்றும் அறிவிப்பு விடுத்துள்ளார்.
இதனால் இலங்கை அரசியல் களத்தில் அவரின் அறிவிப்பு பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பிவிட்டுள்ளது. பொன்சேகாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு மஹிந்த அணி தயாராகி வருகின்றது.
அதேவேளை, “தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ள சரத் பொன்சேகா அரசியல் ரீதியில் வங்குரோத்து மட்டத்துக்கு வந்துள்ளார். ஆகவே, அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி பிரேரணை கொண்டுவரப்பட்டால் அவரை பிரபல்யப்படுத்தும் நடவடிக்கையாக அது அமைந்துவிடும். ஆகவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை அவசியமில்லை” என்ற கருத்தும் பொது எதிரணியிலுள்ள சில உறுப்பினர்கள் மத்தியில் இருக்கின்றது.
அத்துடன், அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகவும் பொது எதிரணி சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்கலாம்

தாயக மண்ணில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது திலீபனின் நினைவேந்தல் வாரம்!

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அமைதிப் படையாகக் காலடி எடுத்துவைத்து ஆக்கிரமிப்புப் படையாக மாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி சூறையாடி …

error: Content is protected!