Thursday , July 19 2018
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் விழா – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் விழா – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிதாமகனும், இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலை பீடம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

காலையில் அங்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அப்போது பாஜக மூத்த தலைவர் அத்வானியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நேரத்தில் புத்த பிக்குகளிடம் ஆசி பெற்ற பின்னர், இருவரும் மரியாதை நிமித்தமாக கைகுலுக்கி பேசிக் கொண்டனர்

Check Also

22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்

யாழ்ப்பாணம் – பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு அருகில் இருந்த அன்னதான மடத்தில் 22 வருடங்களாக தங்கியிருந்த கடற்படையினர் வெளியேறியுள்ளனர். …

error: Content is protected!