Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கொழும்பு கடற்கரையில் கடற்படையினர் குவிப்பு

கொழும்பு கடற்கரையில் கடற்படையினர் குவிப்பு

கொழும்பு, வத்தளை கடற்கரை பகுதியில் எண்ணெய் படிமங்கள் பாரியளவில் மிதந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

முத்துராஜவெல முனையத்திற்கு கப்பலில் இருந்து எரிபொருளை எடுத்துச் செல்லும் குழாய் ஒன்றில் கசிவு ஏற்பட்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக பாரியளவில் கடற்கரை அசுத்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எண்ணெய் படிமங்ளை அகற்றும் பணியில் கடற்படை அதிகாரிகள் மற்றும் கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் 300க்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் இதனை அகற்றவதற்கு கிட்டத்தட்ட 3 நாட்கள் செல்லும் என அறிவிக்கப்படுகிறது.

எப்படியிருப்பினும் கடற்கரையில் உள்ள உயிரினங்களுக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன், கடற்கரையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …