Monday , March 25 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தப்பு கணக்கு போட்ட மோடி; திமிரிய ரிசர்வ் வங்கி ஆளுநர்

தப்பு கணக்கு போட்ட மோடி; திமிரிய ரிசர்வ் வங்கி ஆளுநர்

மத்திய அரசு சமீபத்தில் சிபிஐ விவகாரத்தில் எடுத்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்து ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கு நடந்து வந்த பனிப்போர் தற்போது வெளியே தெரிய துவங்கியுள்ளது.

ஆம், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றிவருவதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உரிய சுதந்திரத்தை வழங்குவதில்லை என்ர குற்றச்சாட்டி இருந்து வந்தது.

கடந்த ஆண்டு வட்டி விகிதம் தொடர்பான விவகாரம், நீரவ் மோடி விவகாரம், பொதுத் துறை வங்கிகளை முறைப்படுத்தும் விவகாரம் அதற்கு முன்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என அனைத்திலும் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மனக்கசப்பு இருந்துள்ளது.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பதவியிலிருந்து சென்றபோது, மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால், உர்ஜித் படேல் பதவிக்கு வந்தார்.

உர்ஜித் படேல் குஜராத்காரர், தன்னுடைய பிடியில் இருப்பார் என்ற கணக்கில் காய் நகர்த்தினார் மோடி. ஆனால், தற்போது உர்ஜித் படேல் பிரச்சனையை துவங்கியுள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுத்தால் அது மேலும் சிக்கலாகும் என மத்திய அரசு அமைதி காத்து வருகிறதாம்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv