Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்

கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்

கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நல்லாட்சி அரசு கவனம் செலுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

விமானப்படை வசமுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, கேப்பாப்பிலவு மக்கள் 14 ஆவது நாளாகவும் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கேப்பாப்பிலவு மக்கள் நீண்டகாலமாக பொய் வாக்குறுதிகளினால் ஏமாற்றப்பட்டு, கலந்துரையாடல்களில் நம்பிக்கையில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுபான்மை மக்களது ஆதரவோடு, ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ள நல்லாட்சி அரசுக்கு இந்த விடயத்தில் விசேட பொறுப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

30 வருட கால யுத்தத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு தொடர்ந்தும் அசௌகரியங்களை ஏற்படுத்துவது சிறந்ததல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உருவாகியுள்ள சுதந்திர காற்றை குறித்த மக்களும் சுவாசிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு வாழ்வதற்கும், விவசாயம் செய்வதற்கும் தேவையான காணிகளை நல்லாட்சி அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …