Saturday , April 20 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையின் செயற்பாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்!

இலங்கையின் செயற்பாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து உறுப்பு நாடுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இது மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு இடமளிப்பதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த பிரேரணைக்கு சார்பாக செயற்பட்டமை வேதனையை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா தீர்மானங்களுக்கு அனுசரணை வழங்கிக்கொண்டே கலப்பு நீதிமன்ற யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாடு இலங்கையின் நேர்மைத் தன்மையையும் அதன் ஏமாற்று தந்திரத்தையும் வெளிச்சம்போட்டு காட்டுவதாகவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கால அவகாசம் வழங்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு எந்தவகையான ஏமாற்றத்தையும் விரக்தியையும் கொடுத்திருக்கும் என்பதையும் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றுவதற்கு காத்திரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கும் இலங்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும், அதற்கான நிரந்தர அலுவலகம் வடக்கு கிழக்கில் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

மேலும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் உறுப்பு நாடுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv