Tuesday , April 16 2024
Home / முக்கிய செய்திகள் / முன்னாள் நிதியமைச்சரை பாராட்டும் புதிய நிதியமைச்சர்

முன்னாள் நிதியமைச்சரை பாராட்டும் புதிய நிதியமைச்சர்

நாம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொள்ளும் போது நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டிருந்தாலும் ரவி கருணாநாயக்கவின் கடின உழைப்பினால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அமைச்சுப் பொறுப்புக்களில் உள்ள அனைத்துச் சவால்களையும் எதிர்நோக்க நான் தயாராக இருக்கின்றேன். முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாட்டின் பொருளாதாரத்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். எதிர்காலத்தில் எமது அமைச்சினது செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவளித்ததுடன், தற்போது ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையும் இலங்கைக்கு கிடைத்துள்ளதால் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை மேலும் திறனுடன் முன்னெடுத்துச் செல்ல முடியும்” என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv