Thursday , April 11 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நாட்டு மக்களுக்கு மஹிந்தவின் புதிய அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு மஹிந்தவின் புதிய அறிவிப்பு

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் நாட்டை பிளவுபடுத்தும் புதிய அரசியலமைபப்பு ஆகிய அனைத்து நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஆகும் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த 2015 ஆம் ஆண்டு நுனவரி மாதம் 9 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 4 வருட களாலமாக இலங்கை நாடு என்ற அடிப்படையில் மூன்றாக பிளவு பட்டுள்ளது.

கடன்கள் மற்றும் கொடுப்பனவுகளை காட்டிலும் 500 சதவீதமான அரச முறை கடன்களை கடந்த 4 வருடங்களுக்குள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது.கடந்த அரசாங்கம் பெற்ற கடன்களை மீள செலுத்தவே தேசிய அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொண்டுள்ளது என குறிப்பிட்டனர்.அப்படடியாயின் மீள செலுத்தப்பட்ட கடன்கள் 50 வீதத்தையும் கடந்த நான்கு வருடத்திற்குள் தாண்டி சென்றிருக்காது.

மேலும், பொருளாதாரம் இன்று நாளை அடுத்தமாதம் எந்த நிலைமையை அடையும் என்பனை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.நாம் எதிர்கொண்டுள்ள மூன்றாவது பிரச்சினையாக அரசியலமைப்பின் 19 ஆம் திருத்த சட்டம் காணப்படுகிறது.

நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வந்தாலும் அரசியலமைப்பில் குறிப்பிட்ட நான்கரை வருட காலத்திற்குள் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என்ற நிலைமை காணப்படுகிறது.இன்று அரசாங்கத்தில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவை அனைத்திற்கும் மக்களே ஒரு தீர்வினை முன்வைக்க வேண்டும்.

அதற்கு பொது தேர்தலை விரைவாக நடத்த மாறுபட்ட வழிமுறைகளையாவது பின்பற்ற வேண்டும் என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv