Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 101 பேர் மன்றில் காணப்படுகின்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை மஹிந்தவிற்கு வழங்க வேண்டிய நிலை சபாநாயகருக்கு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் வைத்து இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஜனநாயக சக்தியாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளோம்.எதிர்க்கட்சியில் செயற்பட்டு நாட்டை காப்பாற்றுவதற்காக தேர்தலொன்றை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடுவோம்.ஜனநாயகத்தை பாதுகாப்பதே எமது நோக்கம். ஆனால், ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயகத்திற்கு எதிரான ஆபத்தான பயணத்திற்கு தயாராகிறது” எனத் தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv