Friday , March 29 2024
Home / ஆன்மிகம் / அனுமனை வழிபட உகந்த தினங்கள்…!

அனுமனை வழிபட உகந்த தினங்கள்…!

துளசி மாலையும் வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விஷேசமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ஸ்ரீ ராமஜெயம் அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜய ஜய ராம என்ற மந்திரத்தை 54 அல்லது 108 முறை தியானிக்க வேண்டும்.

அதன் பிறகு தமது பிரார்த்தனையைச் சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டின் அர்ச்சனை செய்ய வேண்டும்.
கவசம் மற்றும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் வேண்டும். மார்கழி மாதத்தில் மூல நட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை (இதுதான் ஆஞ்சநேயர் அவதரித்த திருநாள்).

நட்சத்திரமும் அமாவாசையும் சேர்ந்து வராவிட்டால் அமாவாசையில் பூஜையை தொடங்குவது மிகவும் சிறப்பாகும். சித்திரையில் ஸ்ரீ ராமநவமி தினத்தில் தொடங்கலாம்.

மாதம் தோறும் கேட்டை நட்சத்திரத்தில், இவை எதுவும் இல்லாவிட்டால் புதன், வியாழன், சனிக்கிழமைகளில் பூஜையைத் தொடங்கலாம். அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல வியாதிகளும் விலகும். மோட்சம் பெறலாம்.

Check Also

கருடனை எந்த கிழமையில் வணங்கினால் என்ன பலன்….!

திருமாலின் வாகனமாக இருப்பவர் கருடன். பறவைகளின் அரசனாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். அமிர்தத்தை தேவ லோகத்தில் இருந்து …