Thursday , March 28 2024
Home / ஆன்மிகம் / கருடனை எந்த கிழமையில் வணங்கினால் என்ன பலன்….!

கருடனை எந்த கிழமையில் வணங்கினால் என்ன பலன்….!

திருமாலின் வாகனமாக இருப்பவர் கருடன். பறவைகளின் அரசனாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். அமிர்தத்தை தேவ லோகத்தில் இருந்து பூமிக்கு எடுத்து வந்த பெருமை இவரை சாரும்.

கருடனுக்குகருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தல் குறிப்பிட்ட பலன்களை பெறலாம்.

ஞாயிறு – நோய் நீங்கும். திங்கள் – குடும்பம் செழிக்கும். செவ்வாய் – உடல் பலம் கூடும். புதன் – எதிரிகளின் தொல்லை நீங்கும். வியாழன் – நீண்ட ஆயுள் பெறலாம். வெள்ளி – லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். சனி – மோட்சம் கிடைக்கும்

ஆகையால் கோவிலுக்கு செல்வோர்களும், வீட்டில் இருப்போர்களும் தினமும் கருடனை வணங்கி துதிக்கவும். கருடனை தினம்தோறும் வணங்குவதன் பயனாக நாக தோஷம் நீங்கும். தோல் வியாதிகள் குணமடையும். திருமாணமான பெண்களுக்கு அறிவும், ஆற்றலும் நிறைந்த குழந்தை பிறக்கும். தீராத நோய்க்கள் தீரும்.

பெருமாள் கோவில்களுக்கு செல்வோர் கருடனை வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கையில் கருடன் வந்து வட்டமிட்டால் மட்டுமே அந்த கும்பாபிஷேகம் பூர்த்துயடைகிறது.

Check Also

மகாவிஷ்ணு ராமாவதாரத்தை எடுப்பதற்கு முன்பாக

மகாவிஷ்ணு ராமாவதாரத்தை எடுப்பதற்கு முன்பாக, அனைத்து தெய்வங்களும் 33 கோடி தேவர்களும் வைகுண்டத்தில் சங்கமித்தார்கள். ராமாவதாரத்தில் எந்தெந்த பாத்திரங்கள் வரும், …