Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம் : கொள்கையில் மாற்றமில்லை

கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம் : கொள்கையில் மாற்றமில்லை

கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம் : கொள்கையில் மாற்றமில்லை

எமது உறவுகள் என்ற எண்ணம் இளைஞர்களுக்கு இருக்குமானால் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க கேப்பாபுலவில் 25 ஆம் திகதி ஒன்றுகூடுமாறு இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலவுக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

விமானப்படையினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் இன்று 22 ஆவது நாளாக தொடர்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 31 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்றும் தொடர்கின்றது.

குறித்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதுடன், கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்றும் விமானப்படையினரின் முகாமிற்கு முன்னால் ஒன்று திரண்ட மக்கள் காணிகளிலிருந்து விமானப்படையினரை வெளியேறுமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி புலவுக்குடியிருப்பில் இளைஞர்களை ஒன்று கூடி போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இதேவேளை தமது காணிகள் பொருளாதார வளம் நிறைந்த காணிகள் என்பதாலேயே தமது காணிகளை விமானப்படையினர் கையளிப்பதற்கு மறுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …