Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கேப்பாப்புலவு மாணவர்களின் ஏக்கம்

கேப்பாப்புலவு மாணவர்களின் ஏக்கம்

கேப்பாப்புலவு மாணவர்களின் ஏக்கம்

தமது எதிர்காலம் தொடர்பில் கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மாணவர்கள் ஏங்கிநிற்கின்றனர்.

சட்டத்தரணியாகும் தமது கனவு மற்றும் தமது கல்வி தொடர்ச்சியான நிலமீட்புப் போராட்டத்தினால் சீரழிந்து செல்லதாகவும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று போராட்டம் 28 ஆவது நாளாக எந்தவொரு தீர்வும் இன்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் அணி மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் நேற்றைய தினம் தமது ஆதரவவைத் தெரிவித்துள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் 2009 ஆம் ஆண்டு மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த கேப்பாப்புலவு மக்கள், 2012 ஆம் ஆண்டு கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் குடியமர்ந்தனர்.

மாதிரிக் கிராமத்தில் கல்வி வசதி மற்றும் மலசலகூட வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட போதியளவு இன்மையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இந்த நிலையில், பெற்றோர்கள் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால், பிலவுக்குடியிருப்பு மாணவர்களும் பெற்றோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை தீர்வின்றிய நிலையில் போராட்டம் தொடர்ந்தாலும், தமது காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீதியோரத்தில் வெயில் மற்றும் கொட்டும் பனிகளையெல்லாம் தாண்டி சொந்த மண்ணில் கால்பதிக்க வேண்டும் என்ற பேராசையுடன் இந்த மக்களின் அறவழிப் போராட்டம் இன்று 28 ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பல்வேறு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகிவரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையால் நடமாடும் வைத்திய சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. .

நோயாளர் காவுவண்டியில் செல்லும் வைத்தியர்கள் மக்களை பரிசோதித்து மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்றைய தினம் தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மற்றும் இயக்குநரும் ஈழ உணர்வாளருமான புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் சென்று சந்தித்துள்ளனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …