Thursday , March 28 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / விஜயுடன் மெர்சல் படத்தை பார்த்த கமல்..!

விஜயுடன் மெர்சல் படத்தை பார்த்த கமல்..!

மெர்சல் திரைப்படம் குறித்த சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனை, நடிகர் விஜய் சந்தித்துள்ளார்.

விஜய் மற்றும் படக்குழுவினருடன் ‘மெர்சல்’ திரைப்படத்தை இன்று பார்த்துள்ளார் கமல்ஹாசன். இது தொடர்பான புகைப்படங்களை மெர்சல் படத்தின் இயக்குநர் அட்லி, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், கமல்ஹாசன் மெர்சல் திரைப்படத்தைப் பார்க்கும்போது, உடன் இருந்தது வாழ்வின் முக்கிய தருணம் என குறிப்பிட்டுள்ளார். மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களையும் தவறான தகவல்களையும் தெரிவித்திருப்பதாகக் கூறி, அத்திரைப்படத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மெர்சல் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘மெர்சல் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்.

விமர்சனம் செய்வோரை மௌனமாக்கக் கூடாது. பேசும்போதுதான் இந்தியா ஒளிரும்’ என பதிவிட்டிருந்தார். இதையடுத்து விஜய் மற்றும் அட்லி கமல்ஹாசனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv