Saturday , April 20 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஆசிரியர்களின் செயற்பாடுகளில் மனித உரிமைகள் என்ற விடயம் தலையிடுவது தவறு

ஆசிரியர்களின் செயற்பாடுகளில் மனித உரிமைகள் என்ற விடயம் தலையிடுவது தவறு

மனித உரிமைகள் என்ற விடயம் முறையின்றி ஆசிரியர்களின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதனால் சிறந்தவொரு ஒழுக்கமுள்ள எதிர்கால தலைமுறையினை கட்டியெழுப்புதல் தற்போது சவால்மிக்கதாக காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில் அன்று முதல் பிள்ளைகளின் ஒழுக்கமானது பாடசாலைகளினால் பேணப்பட்டு வருகின்றது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்செயலாக இடம்பெறும் சில தவறுகளுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் சமூகத்தினுள் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் சிறந்ததோர் ஒழுக்கமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு ஆசிரியர்களால் ஆற்றப்படும் பணிகள் அளப்பரியனவாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை, கொகாவல மத்திய மகா வித்தியாலத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று (11) கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv