Wednesday , June 26 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / IS தீவிரவாதிகளின் முகாம்!! விசேடஅதிரடிப்படையினர் முற்றுகை

IS தீவிரவாதிகளின் முகாம்!! விசேடஅதிரடிப்படையினர் முற்றுகை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் முஸ்லீம் கிராமத்தில் அமைந்திருந்த இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் முஸ்லீம் பிரதேசத்தில் இன்று காலை விசேடஅதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினரின் பயிற்சி முகாம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

ஐ. எஸ் அமைப்பின் தற்கொலைதாரியான ரில்வானின் தலைமையில் இயங்கியதாக கூறப்படும் குறித்த பயிற்சி முகாமில் வைத்தே தீவிரவாதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த பயிற்சி முகாமில் இருந்து தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எஸ்லோன் குழாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த குழாயில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் அண்மையில் கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

எனவே அந்த வெடிகுண்டு இங்கு தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த பயிற்சி முகாமில் இருந்த அப்துல் ரகுப் என்பவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த பயிற்சி முகாமில் வைத்தே பல வெடிபொருட்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதுடன் இந்த பயிற்சி முகாமில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வெடி குண்டே கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி பாலமுனையில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Check Also

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 25.06.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச் சல் அதிகரிக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் …

error: Content is protected!