Thursday , March 28 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 20.10.2017

இன்றைய ராசிபலன் 20.10.2017

மேஷம்: பெற்றோரின் சொல்லுக்கு மரியாதை தருவீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

ரிஷபம்: சுய தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.

மிதுனம்: சிறு முயற்சியிலும் பலமடங்கு நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சகோதர வகையில் உதவி கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

கடகம்: சமயோசித குணத்துடன் செயல்பட்டு வருவீர்கள். மனதில் நல்லெண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். தாராள பணவரவு கிடைக்கும். அரசுவகையில் நன்மை உண்டு.

சிம்மம்: சிலரது பேச்சால் அதிருப்திக்கு ஆளாவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் தேவைப்படும். அளவான லாபம் கிடைக்கும். பெண்கள் ஆடம்பர நோக்கமுடன் செயல்படுவர்.

கன்னி: கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர். எதிர்பார்த்த நல்ல செய்தி வீடு தேடி வரும்.

துலாம்: புதிய முயற்சியில் ஈடுபட்டு நன்மை காண்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகும். லாபம் உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர்.

விருச்சிகம்: எண்ணத்தில் நேர்மை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சியால் நிலுவைப் பணம் வசூலாகும். தாயின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு: பேச்சில் தடுமாற்றம் ஏற்படலாம். நிதானம் பின்பற்றுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வகையில் கவுரவத்திற்காக செலவு செய்ய நேரிடலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்

மகரம்: திட்டமிட்டபணி நிறைவேற விடா முயற்சி தேவை. நண்பரின் ஆலோசனை நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். அரசு சார்ந்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடல்நலனில் அக்கறை உண்டாகும்

கும்பம்: உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். எதிரியைக் கூட பெருந்தன்மையுடன் மன்னிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும்.

மீனம்: அறிமுகம் இல்லாதவரிடம் குடும்ப விஷயம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் வாங்க வேண்டாம். உடல்நலம் சீராக இருக்கும்.

Check Also

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் …